• August 24, 2019
0 Comments

அதிமுக கூட்டணியில் இனி இடம் பெற முடியாத நிலையில் தேமுதிக வந்துவிட்டதாக சந்தேகம் எழும்பியுள்ளது. 2015 லோக்சபா தேர்தலில் பாஜக, பாமகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட தேமுதிக, போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் தோல்வியை பெற்றது. அதன் பின், மக்கள் நலக் கூட்டணி என்ற வலைக்குள் போய் சிக்கி, வாக்கு சதவீதம் 2.39 ஆக இறங்கிப் போனது. பாஜக, அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக செய்த செயல்கள், மக்களிடையே செல்வாக்கை குறைத்து, மேலும் மோசமான நிலைக்கு போனது. பதிவான வாக்குகளில் குறைந்தது 6 சதவீத வாக்குகளை ஒரு கட்சி பெறவில்லை என்றால், மாநிலக் கட்சி அங்கீகாரம் பறிக்கப்படும். மேலும், தேமுதிகவால் வாக்கு வங்கியும் இல்லாத காரணத்தால், உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சியை அதிமுக கழட்டி விட வாய்ப்புள்ளதாக கூறி வருகின்றனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *