• August 24, 2019
0 Comments

சென்னை

சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவில் வசித்து வந்தவர் பாலசுப்ரமணியன் (60). ஆந்திரா வங்கியில் ஊழியராக வேலை செய்து வந்த, இவருக்கு அருள்மொழிநங்கை என்ற மனைவி உள்ளார்..

இதையடுத்து, கடந்த 10-ந் தேதி இவருக்கும், மனைவி அருள்மொழிநங்கைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்தை தொடர்ந்து, மனஉலைச்சலுக்கு ஆளான பாலசுப்ரமணியன் திடீரென்று வீட்டின் குளியலறையில் இருந்த திராவகத்தை எடுத்து குடித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அருள்மொழி, பாலசுப்ரமணியனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாலசுப்ரமணியன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *