• August 24, 2019
0 Comments

சென்னை

சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கிருஷ்ணன் (49). இவர் செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 9-ந்தேதி இரவு தனது நிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு காரில் சென்ற இவரை, புழல் அருகே மதுரவாயல் மேம்பாலம் அருகே 3 மர்ம நபர்கள் அவரது காரை வழிமறித்து கிருஷ்ணனின் கழுத்தில் கத்தியை வைத்து ரூ.1 லட்சத்தை பறித்து கொண்டனர்.

தொடாந்து இது குறித்து புழல் போலீஸ் நிலையத்தில் கிருஷ்ணன் புகார் செய்தார். இந்த சம்பவத்தில் மீஞ்சூர், பொன்னேரி, பழவேற்காடு மற்றும் கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள 350-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதைவைத்து, செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் மல்லி மாநகரைச் சேர்ந்த ஜெயக்குமார் (28), ராஜ்குமார் (27), இவரது தந்தை மணலி புதுநகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார். சுமன் (38) மற்றும் சிவராஜ் (36) உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *