• August 24, 2019
0 Comments

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை, ஜோதி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா (34). ,சென்னை மாநகராட்சியில் ஊழியராக வேலை பார்த்து வந்த இவருடைய தந்தை இறந்ததால், வாரிசு அடிப்படையில் இந்த வேலை ஜெயாவுக்கு கிடைத்தது. மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜெயாவின் கணவர் இற்நது விட்டதால், தனியாக வாழ்ந்து வந்த இவர், தனக்கு சொந்தமாக உள்ள 4 வீடுகளை வாடகைக்கு விட்டு உள்ளார்.

இந்நிலையில் ஜெயா அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்த நிலையில், அவரை 2-வது திருமணம் செய்து கொள்ள ஜெயா முடிவு செய்திருந்ததாக தெரிகிறது.
ஆனால் கடந்த திங்கட்கிழமைஜெயா தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெயாவின் உடலை கைப்பற்றி பிரோதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஜெயாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் அக்கம்பக்கத்தினர் போலீசிடம் தெரிவித்தனர். இந்நிலையில் ஜெயாவின் வீடு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் 2 பேர் ஜெயாவின் வீட்டுக்குள் செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் ஜெயாவின் அக்காள் தேவி சொத்துக்காக தனது கூட்டாளிகளை வைத்து தங்கை ஜெயாவை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து ஜெயாவின் அக்காள் தேவி மற்றும் எத்திராஜ், சரவணன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *