• August 17, 2019
0 Comments

‘அமெரிக்கா, அமெரிக்க மக்களுக்கே’ என்ற கொள்கையை தீவிரமாக கடைபிடித்து வரும் டிரம்ப் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது சட்டப்பூர்வமான குடியேற்றத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ‘ஹெச் 1பி’ விசாவில் வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி வேலை பார்க்க வழங்கப்படும் விசாவில்  புதிய விதிமுறைகள்  கொண்டுவந்துள்ளன.

மேலும் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்காக வழங்கப்படும் ‘கிரீன்கார்டு’ பெறுவதற்கான புதிய விதிமுறைகளை  அறிவித்துள்ளது. அதாவது ‘கிரீன் கார்டு’ பெற விரும்பும் வெளிநாட்டினர் அதிகபட்ச வருமானமும், அதிகபட்ச கல்வித் தகுதியும் கொண்டிருக்க வேண்டும். குறைந்த வருமானம் மற்றும் குறைவான கல்வித் தகுதி பெற்றவர்கள் இனி ‘கிரீன்கார்டு’ கேட்டு விண்ணப்பிக்க முடியாது.

இதன் மூலம் அமெரிக்காவில் வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.குறைவான வருமானம் கொண்ட ஏழ்மையான மக்களை குறிவைத்து புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது என குடியேற்ற உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *