• August 24, 2019
0 Comments

இந்திய வம்சாவளியை சேர்ந்த அருண் பிரசாந்த் (25)  சிங்கப்பூரில் போலீஸ்காரராக பணியாற்றுகிறார். சமூக வலைத்தளம் மூலமாகவும், நேரடியாகவும் கடந்த 2017-ம் ஆண்டில் பல இளம்பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார்.பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் பெற்றோர்களுடன் வந்து போலீஸ் நிலையத்தில் அருண் பிரசாந்த் மீது புகார் கொடுத்தார்கள் . மேலும்  பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து போலீசார் விசாரித்த போது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அவருடைய செல்போனில்  700-க்கும் மேற்பட்ட  ஆபாசபடங்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து  அவரது வேலை பறிக்கப்பட்டு சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி  குற்றங்கள் நிரூபணமானதால்  2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *