• October 19, 2019
0 Comments

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தொட்டபிலிமுத்திரை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (52). இவரது மகள் திவ்யா (22). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கெலமங்கலம் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த திவ்யா, சம்பவத்தன்று தற்கொலைக்கு முயன்று விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்ததுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கிருந்து தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக திவ்யா அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் திவ்யா நேற்று இறந்தார். இது குறித்து அவரது தந்தை சிவக்குமார் கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *