• August 24, 2019
0 Comments

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள நாட்டுடமையாக்கப்பட்ட வங்கியின் கிளையில்
நேற்று முன்தினம் இரவு வங்கிப் பணிகளை முடித்துவிட்டு வங்கியின் மேலாளர் வங்கியை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நேற்று விடியற்காலை அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் வங்கி அமைந்துள்ள திருப்பூர் குமரன் சாலை வழியாக நடைபயிற்சி சென்றார். அப்போது, வங்கியின் முன்பக்க இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து உள்ளார்.

உடனே அவர் வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, வங்கி மேலாளர் வங்கிக்கு விரைந்து வந்து பார்த்தபோது, வங்கியின் முன்பக்க இரும்பு கதவில் இருந்த 2 பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று வங்கியில் உள்ள நகை, பணம் திருட்டுபோகாமல் பத்திரமாக இருக்கிறதா? என்று ஆய்வு செய்தார். அங்கு நகை-பணம் எதுவும் திருட்டு போகவில்லை என்பதை அறிந்து நிம்மதி அடைந்தார்.

இதைதொடர்ந்து அவர் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *