• August 24, 2019
0 Comments

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள கோனூர், பாப்பன்குளம் பகுதியில் இருந்து பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒட்டன்சத்திரம் பெரியகோட்டையில் செயல்படும் செங்கல்சூளைக்கு மினிவேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேனை காரைக்குடியை சேர்ந்த பாண்டி (23) என்பவர் ஓட்டினார்.

திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் சாலையில் நவாமரத்துப்பட்டி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 33 பெண் தொமிலாளாகள் பேர் படுகாயம் அடைந்தனர்.

தொடாந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வ்நத ஒட்டன்சத்திரம் படுகாயம் அடைந்த 33 பேரையும் பொதுமக்களின் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *