• August 24, 2019
0 Comments

சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் சசிகுமார் (27). கடந்த சில மாதங்களாக சப்-இன்ஸ்பெக்டர் போல் உடை அணிந்து இவர் தான் போலீஸ் எனக்கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார். மேலும் தன்னிடம் பணம் கொடுத்தால் எல்.இ.டி. டி.வி, குளிர்சாதன பெட்டி, செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பாதி விலையில் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி. அப்பகுதியை சேர்ந்த 4 பேர் தனித்தனியாக ரூ.47 ஆயிரம், ரூ.85 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என வாங்கிக்கொண்ட சென்று விட்டார்.

ஆனால் அதன் பிறது சசிகுமாரை தொடர்பு கொள்ள முடியாததால் பணத்தை கொடுத்த 4 பேரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனிடம் புகார் கொடுத்தனர். அவரது உத்தரவின்பேரில் கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கீழப்பழுவூர் புதிய பஸ் நிலையத்தில் சசிகுமாரை கைது செய்தனர். அவரிடம் பணமோசடி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *