• August 24, 2019
0 Comments

சேலம்

டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்துவைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், இறைவன் அருளால் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளவான 120 அடியை எட்டும்.

மத்திய அரசு நாளை தமிழகத்தை யூனியன் பிரதேசமாக ஆக்கினால் அதிமுக கைக்கட்டி தலைவணங்கி நிற்கும் என ப.சிதம்பரம் கூறியது பற்றி கேட்டதற்கு,   ப.சிதம்பரம் எவ்வளவு ஆண்டுகாலம் மத்திய அமைச்சராக இருந்தார்,  நாட்டுக்கும் தமிழகத்திற்கும் அவரால் என்ன பலன் கிடைத்தது. எத்தனை  திட்டங்களை கொண்டு வந்தார் அவரால் பூமிக்குதான் பாரம் என முதல்வர் பழனிசாமி பதில் அளித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *