• August 17, 2019
0 Comments

சென்னை,

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து காஞ்சீபுரத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில், காஞ்சீபுரம் மாவட்டம் அத்திவரதர் சுவாமியை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்கு ஏதுவாக, தற்காலிகமாக ஓரிக்கை, முத்தியால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில், ஒளிமுகமதுபேட்டை மற்றும் வரதராஜபெருமாள் கோவில் அருகில் உள்ள ரங்கசாமி குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையங்களை 12-ந் தேதியன்று போக்குவரத்துத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், அங்கிருந்த பயணிகளுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். அப்போது விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் முத்துகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *