• August 17, 2019
0 Comments

மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி அந்த அணியின் ஹரி நிஷாந்த், ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வழக்கம்போல் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இந்த ஜோடி 14.4 ஓவரில் 101 ரன்னாக இருக்கும்போது பிரிந்தது.

இருப்பினும் அடுத்து வந்த வீரர்கள் ரன் குவிப்பில் ஈடுப்பட்டனர் . இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *