• August 24, 2019
0 Comments

சீனாவை தாக்கிய சூறாவளிக்கு ‘லெகிமா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சூறாவளியானது வெல்னிங் நகரத்தை தாக்கியுள்ளது. வெள்ள தலைமையகத்தில் கூறியபடி ஏறக்குறைய 1.08 மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். மேலும், புயலின் காரணமாக ஜெஜியாங்கில் 5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சூறாவளி காரணமாக 173,000 ஹெக்டர் பயிர்கள் மற்றும் 34,000 வீடுகள் சேதமடைந்தன. சீனாவை தாக்கிய லெகிமா புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. 16 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. இதனால் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *