• August 17, 2019
0 Comments

காஞ்சிபுரம்,

கடந்த மாதம் 1-ந் தேதி முதல் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார். மேலும் அத்திவரதரை தரிசிக்க உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாவட்ட பக்தர்கள், வெளிமாநில பக்தர்களும் காஞ்சிபுரத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் நேற்று பக்தர்கள் 10 மணி நேரம் வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர்.

இந்நிலையில்  அத்திவரதர், எழுந்தருளிய 43-வது நாளான இன்று மஞ்சள் மற்றும் பச்சைப்பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.  தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்  இன்று அத்திவரதரை தரிசனம் செய்தார். மேலும் சந்திரசேகர் ராவுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *