• August 17, 2019
0 Comments

மாஸ்கோ

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி நகராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் போட்டியிட முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டித்தும், தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் கடந்த மாத மத்தியில் மாஸ்கோ நகர மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தை போலீசார் கடுமையாக ஒடுக்கி வருகின்றனர். மேலும் அங்கீகரிக்கப்படாத பேரணியில் ஈடுபட்டதாக கூறி சுமார் 1,500 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த அங்கீகரிக்கப்பட்ட போராட்டத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் திரண்டதால் மாஸ்கோ நகரத்தின் மத்திய பகுதி குலுங்கியது. போராட்டத்தின்போது அங்கு மழை பெய்தது. ஆனாலும் போராட்டக்காரர்கள் அதனை பொருட்படுத்தாமல் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.

அங்கீகரிக்கப்பட்ட போராட்டம் என்ற போதிலும், போராட்டக்காரர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 130-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து குண்டுகட்டாக தூக்கி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *