• August 24, 2019
0 Comments

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் சூரிய ஒளி தகடுகள் பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 22 அரசு கட்டிடங்களில், சுமார் 15 லட்ச ரூபாய் மதிப்பில், தினமும் 20 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கக்கூடிய வகையில் சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை கட்டிடத்தில், நாளொன்றுக்கு 100 யூனிட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் பயன்படுத்தப்படும் எனவும், இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் புதுபிக்கவல்ல எரிசக்தி முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *