• August 24, 2019
0 Comments

ஜம்மு- காஷ்மீரில், தொடர்ச்சியாக பெய்து வரும் மழைக்காரணமாக ஆங்காங்கு மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று, ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சரக்கு லாரிகள், வாகனங்கள் பயணித்தபோது, திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாதபடி வரிசைக்கட்டி நின்றன. தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர், கொட்டும் மழையில் புல்டோசர்களை கொண்டு சாலையில் இருந்த மண்மேடுகளை சமன் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *