• August 24, 2019
0 Comments

மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கியதை தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளில் ஐக்கியமாகி வருகின்றனர். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மும்பை வடாலா தொகுதி எம்.எல்.ஏ. காளிதாஸ் கோலம்கர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைபவ் பிச்சாத் (அகோலா தொகுதி), சிவேந்திர ராஜே போசலே (சத்தாரா), சந்தீப் நாயக் (ஐரோலி) ஆகியோரும் தஙகளது பதவியை ராஜினாமா செய்தனர். இவர்கள் சபாநாயகர் ஹரிபாவு பாகடேவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். இந்நிலையில், பதவி விலகிய தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் இன்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பா.ஜ.க.வில் இன்று இணைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *