• August 24, 2019
0 Comments

உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி சர்ச்சைக்குரிய வகையில் விபத்துக்குள்ளானார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிவருகின்றனர். முன்னதாகவே, தங்களுக்கு பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங்கிடமிருந்து மிரட்டல் வருவதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இந்தக் கடிதம் ஜூலை 17ஆம் தேதி உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு கிடைத்துள்ளது. ஆனால், இன்றுவரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பார்வைக்கு இது எடுத்து செல்லப்படவில்லை.இன்று தானாக முன்வந்து உன்னாவ் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட கடிதத்தை ஏன் இன்னும் அளிக்கவில்லை? ஜூலை 17ஆம் தேதியே கிடைத்த கடிதம் தலைமை நீதிபதியின் பார்வைக்கு ஏன் கொண்டு செல்லப்படவில்லை?
என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், இதுகுறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்ற செயலருக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *