• August 24, 2019
0 Comments

ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ஃபரூக் அப்துல்லா இருந்த கால கட்டத்தில் பிசிசிஐ வழங்கிய 112 கோடி ரூபாய் நிதியில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 43 கோடி ரூபாயை ஊழல் செய்ததாக ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் 4 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. போலீஸ் விசாரித்து வந்த இந்த வழக்கை 2015ஆம் ஆண்டில் அம்மாநில உயர்நீதிமன்றமானது சிபிஐக்கு மாற்றியது. 2018ல், ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க, அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் சண்டிகரில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி, ஃபரூக் அப்துல்லா, நேரில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *