• August 24, 2019
0 Comments

கடன் மற்றும் தொழில் சார்ந்த பிரச்சனைகள் காரணமாக, கஃபே காஃபி டே நிறுவனர் சித்தார்தா மங்களூரு அருகே ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆனந்த் மகிந்திரா, சித்தார்தா பற்றியும் அவரின் நிதிச் சூழல் தொடர்பாகவும் தமக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஒன்று மட்டும் தெரியும் என்று பதிவிட்டுள்ள ஆனந்த் மகிந்திரா, தொழிலில் ஏற்பட்ட தோல்வி தங்களின் சுய மரியாதையை அழிப்பதை தொழில் முனைவோர்கள் அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார். அவ்வாறு அனுமதிக்கும் பட்சத்தில் அது அந்த தொழிலுக்கு இறுதி முடிவாகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *