• August 24, 2019
0 Comments

சனிக்கிழமை நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், மின்சார வாகனங்களுக்கான வரி 12-இல் இருந்து 5 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது. மின்சாரக் கார்களின் சார்ஜர்களுக்கான வரியும், 18இல் இருந்து 5 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிக்குறைப்பானது நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான ஹூண்டாயின் கோனா கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேளையில், மின்சார வாகனங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ள செய்தி, மின்சாரக் கார் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜி.எஸ்.டி. வரி குறைப்பால், 25 லட்சம் ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலையைக் கொண்ட கோனா காரின் விலையில் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை குறைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் விலைக்குறைப்பு தொடர்பாக ஹூண்டாய் நிறுவனத்திடம் இருந்து எந்த விதமான அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *