• August 19, 2019
0 Comments

மும்பை:

மும்பையில் மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் புறநகர் மின்சார ரெயில் சேவைகளை சுமார் 80 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். மின்சார ரெயில்களில் இருந்து தவறி விழுந்தும், தண்டவாளத்தை கடக்கும் போது அடிபட்டும், ரெயிலின் மேற்கூரை ஏறி மின்சாரம் தாக்கியும் தினசரி 8 முதல் 9 பேர் வரை பலியாகி வருகிறார்கள்.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் ஒரே நாளில் மட்டும் புறநகர் ரெயில்வே வழித்தடத்தில் ரெயில் விபத்துகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்து இருப்பதாக ரெயில்வே போலீசார் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். இதுதவிர 13 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *