• August 19, 2019
0 Comments

சென்னை:

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை மாணவர்கள் மனஅழுத்தம் இன்றி எதிர்கொள்வதற்கு வசதியாகவும், ஆசிரியர்கள் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த ஏதுவாகவும் பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் கால அட்டவணைகள் கடந்த சில ஆண்டுகளாக முன்கூட்டியே வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2019-2020-ம் கல்வி ஆண்டில் (இந்த ஆண்டு) பொதுத்தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஆகியவை குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

* 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு (பிளஸ்-2) வருகிற மார்ச் 2-ந்தேதி தொடங்கி மார்ச் 24-ந்தேதி முடிவடைகிறது. தேர்வு முடிவு ஏப்ரல் 24-ந்தேதி வெளியாகும்.

* 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு (பிளஸ்-1) மார்ச் 4-ந்தேதி தொடங்கி மார்ச் 26-ந்தேதி நிறைவடைகிறது. இந்த தேர்வு முடிவு மே மாதம் 14-ந்தேதி வெளியிடப்படுகிறது.

* 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி.) மார்ச் 17-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 9-ந்தேதி முடிவு பெறுகிறது. தேர்வு முடிவு மே 4-ந்தேதி வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *