• August 19, 2019
0 Comments

உத்திர பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் நிலத்தகராறில் கடந்த 17ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியாகினர். மேலும் 24 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்து வாரணாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து துப்பாக்கிச் சூடு நடைபெற்ற கிராமத்தை நோக்கி சென்ற பிரியங்கா காந்தியை, 144 தடை உத்தரவு அமலில் இருபபதை கூறி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பிரியங்கா, சாலையில் அமர்ந்து ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனிடையே தர்ணாவை நிறுத்த மறுத்ததால் பிரியங்கா காந்தி போலீசார் கைது செய்து அரசு வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது பிரியங்கா காந்தி அவர்களிடம் என்னை எங்கே அழைத்துச்செல்கிறீர்கள். எங்கு வருவதாக இருந்தாலும் நான் வர தயாராக இருக்கிறேன் என்றார். இந்நிலையில் தற்போது உத்திர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் அடாவடி அரசியல் காரணமாக பிரியங்கா காந்தி கைதாகி உள்ளார் என ராகுல் காந்தி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுபோன்ற செயல்கள் பாஜக அரசின்கீழ் மக்கள் பாதுகாப்பாக வாழ இயலாது என்பதைக் காட்டுகிறது என ராகுல் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *