• August 19, 2019
0 Comments

கடந்த ஜூன் மாதம் ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் ஏற்றி சென்ற 2 டேங்கர்கள் தாக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து இந்தியா தனது வணிக கப்பல்களை பாதுகாக்க பெர்சியா வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் விமானந் தாங்கிய போர்க்கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளது. இந்தநிலையில், அமெரிக்கா தனது வான் எல்லையில் பறந்த ஈரானின் டிரோன் ஒன்றையும் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதனால் ஈரான்- அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால், இந்தியா தனது வணிகப்பல்களை பாதுகாக்க பெர்சியா வளைகுடா பகுதியில் தொடர்ந்து போர்க்கப்பல்களை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. மேலும் இந்த கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தி அருகே நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்துடன் எந்த போர் ஒத்திகையிலும் ஈடுபடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *