• August 19, 2019
0 Comments

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ராவில் நிலத்தகராறில் கடந்த 17ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியாகினர். மேலும் 24 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்து வாரணாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து துப்பாக்கிச் சூடு நடைபெற்ற கிராமத்தை நோக்கி சென்ற பிரியங்கா காந்தியை, 144 தடை உத்தரவு அமலில் இருபபதை கூறி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பிரியங்கா, சாலையில் அமர்ந்து ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை போலீசார் அங்கிருந்து திருப்பி அனுப்பினர். இதனிடையே தன்னை போலீசார் கைது செய்து வைத்துள்ளதாக பிரியங்கா காந்தி கூறினார். ஆனால் பிரியங்காவை கைது செய்யவில்லை என்று உத்தரபிரதேச போலீசார் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *