• July 20, 2019
0 Comments

பழைய சோறு பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பழைய சோறு – 3 கப்
தயிர் – ஒரு கப்
எலுமிச்சை சாறு – அரை மூடி
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
கடலை பருப்பு – 1 ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பழைய சோறு தண்ணீரை இறுத்துவிட்டு கைகளால் நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

அதோடு தயிர், எலுமிச்சை சாறு , தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பிசையவும்.

தற்போது சிறு துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு பொறிந்ததும் கடலை பருப்பு சேர்த்துக்கொள்ளவும். பொன்னிறமாக மாறியதும் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.

தற்போது தாளித்த பருப்பை கிளறி வைத்துள்ள பழைய சோற்றில் கொட்டிக் கிளறவும். தேவைப்பட்டால் கொத்தமல்லி தழை தூவலாம்.

சுவையான பழைய சோறு பிரியாணி தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *