• August 19, 2019
0 Comments

பூதப்பாண்டி அருகே தெரிசனங்கோப்பு கீழத் தெரு பகுதியை சேர்ந்தவர் ராமையாபிள்ளை. இவரது மனைவி பெருமாள்பிள்ளை(வயது 82). இவர் வீட்டின் பக்கத்தில் உள்ள தெருக் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு இருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் பெருமாள்பிள்ளை கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினார். இது குறித்து பூதப்பாண்டி காவல் நிலையத்தில் அவரது மகன் குமார் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *