• June 16, 2019
0 Comments
Advertisements

சென்னை :

சென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் இன்றிரவு ஒரு பெண்ணும், ஒரு வாலிபரும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென அந்த வாலிபர் அரிவாளை எடுத்து பெண்ணை வெட்டியுள்ளார். இதில் அந்த பெண் படுகாயம் அடைந்தார். அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேவேளையில் அந்த வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும் ரெயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *