• August 19, 2019
0 Comments

உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணியை பழி வாங்கியுள்ளதாகவும், இப்போதே அரையிறுதியை குறித்து எதுவும் சொல்ல முடியாது என்று இந்திய அணியின் தலைவர் கோஹ்லி கூறியுள்ளார். இங்கிலாந்தில் இப்போது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று கொண்டு வருகிறது. இதில் கோப்பையை வெல்லும் அணிகளில் எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்கா அடுத்தடுத்து தொடர் தோல்விகளை சந்தித்து அரையிறுதிக்கு நுழையுமா என்ற சந்தேகம் உயர்ந்துள்ளது. ஆனால் அதே நேரம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டு வருகின்றன.

இந்த தருணத்தில் இந்திய அணியின் தலைவரான கோஹ்லியிடன், அரையிறுதி வாய்ப்பு குறித்து கேட்ட போது, இரண்டு போட்டிகள் தான் முடிந்துள்ளது. மேலும் 6 போட்டிகளுக்குப் பிறகே, அரை இறுதிக்கான வாய்ப்பு குறித்து பேச முடியும், பேட்டிங், பவுலிங், பீல்டிங் என எல்லாவற்றிலும் இந்தியா வலிமையுடன் இருப்பது சிறப்பான விஷயம் என்று சொல்லியிருக்கிறார். மேலும் அவர் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருப்பது சந்தோஷமாக உள்ளதாகவும், சொந்த மண்ணில் அந்த அணி தங்களை வீழ்த்தியதற்கு பழிவாங்கி விட்டதாக கூறியுள்ளார். மேலும் இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணி கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்று கைப்பற்றியிருந்தது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *