• August 19, 2019
0 Comments

சென்னை:

சென்னையில் அமைந்துள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் பங்கேற்று, கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி கொண்டு வருகின்றனர். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமை தற்போது உள்ளது. இவற்றை மாற்றிவிட்டு ஒற்றைத் தலைமையில் கட்சி செயல்பட வேண்டும் என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சமீபத்தில் கருத்து கூறியிருந்தார் .

அவரது கருத்துக்கு கட்சியில் சில நிர்வாகிகள் ஆதரவும் தெரிவித்தனர். இந்த விவகாரம் இப்போது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியது .இவ்வாறான பரபரப்பான சூழ்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று காலை கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *