• June 16, 2019
0 Comments
Advertisements

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, எனது தலைமையிலான அமெரிக்க நாட்டினை பிற நாட்டினர் இனியும் ஏமாற்ற விடமாட்டேன். மோடி தலைமையிலான இந்திய அரசு நமது நட்பு நாடுகளில் ஒன்று. ஆனால் அவர்கள் நமது பொருட்களை இறக்குமதி செய்யும் போது நம்மிடம் அதிக வரி வசூலிக்கிறார்கள்.

இதுகுறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசினேன். அப்போது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் ஹார்ட்லி-டேவிட்சன் மோட்டார் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிதிப்பது நியாயம் அற்றது என்று கூறினேன். அதன் காரணமாக பிரதமர் மோடி 100 சதவீத இறக்குமதி வரியிலிருந்து 50 சதவீதமாக குறைத்தார். இதுவும் அதிகம் தான், ஏற்றுக்கொள்ள முடியாதது.

Advertisements

நாங்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் மோட்டார் வாகனங்களுக்கு வரி விதிப்பதில்லை. அதே போல் அமெரிக்க மோட்டார் வாகனங்களுக்கு இந்தியா வரி விதிக்கக்கூடாது என்று மோடியிடம் தெரிவித்தேன். இது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *