• June 16, 2019
0 Comments
Advertisements

நாகர்கோவில்:

தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து தென் மாவட்டங்களில் பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ளது . அதனால் குமரி, நீலகிரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கேரளாவில் வருடம் தோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக கடந்த 8-ந்தேதி தொடங்கியது. இந்த மழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் சொல்லியுள்ளது .

அதற்கேற்றவாறு கேரளா முழுவதும் கடந்த 4 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் அரபிக்கடலில் உருவான வாயு புயல் காரணமாகவும் பலத்த மழை பெய்கிறது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய ஓரிரு நாளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் பருவமழை தொடங்கும். குமரி மாவட்டத்தில் கடந்த 8-ந்தேதியே தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியது.

Advertisements

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *