• June 16, 2019
0 Comments
Advertisements

கிரிக்கெட் களத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இலங்கை அணியின் அனுபவம் மிகுந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது . இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள மலிங்காவின் மாமியர் காந்தி பெரேதா நேற்று காலை 8 மணியளவில் இயற்கை எய்தினார். இந்த நிலையில் அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க லசித் மலிங்கா நாடு திரும்பவுள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் லசித் மலிங்கா விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கு பின் அவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார் . அதற்கு பின் 13ம் தேதி நடைபெறும் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள இருக்கும் மலிங்கா, எதிர்வரும் ஜூன் 15ம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டம் செய்வார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *