36 வயது ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க அழைக்கிறார்கள் – நடிகை சோனியா அகர்வால் வருத்தம்

0

காதல் கொண்டேன் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். சமீபத்தில் வெளியான அயோக்யா படத்தில் ஒரு காட்சியில் மட்டும் வந்து சென்றார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் பார்க்க சென்று இருந்தேன். அங்கு ரசிகர்கள் என்னை சூழ்ந்துகொண்டனர். இது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆனால் சினிமாத்துறையினர் என்னை ஒரு மும்பை பெண்ணாகவே பார்க்கின்றனர்.

எனக்கு இப்போது 36 வயது ஆகிறது. ஒரு பையனுக்கோ சிறுமிக்கோ அம்மாவாக நடிக்க நான் தயார். ஆனால் இயக்குனர்கள் என்னை என் வயதையொத்த ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க கேட்கிறார்கள். இது என்னை எரிச்சலாக்குகிறது.

Leave A Reply

Your email address will not be published.