ஹர்திக் பாண்டியாவுக்கு இணையாக இந்திய அணயில் வேறு எந்த வீரரும் இல்லை – சேவாக்

0

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்டியா திகழ்கிறார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக 91 ரன்கள் குவித்து அசத்தினார். 15 இன்னிங்சில் 402 ரன்கள் குவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா குறித்து சேவாக் கூறுகையில் ‘‘பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவின் திறமைக்கு இணையாக இந்திய அணியில் யாரும் இல்லை. அவருக்கு இணையாக யாராவது ஒருவர் இருந்திருந்தால், மூன்று துறைகளிலும் (பந்து வீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங்) ஜொலிக்கும் வீரரரை பிசிசிஐ தேர்வு செய்திருக்கும். அப்படி இருந்திருந்தால் ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்கு திரும்பியிருக்க முடியாது’’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.