வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய ‘ஏ’ அணி அறிவிப்பு

0

இந்திய கிரிக்கெட் ‘ஏ’ அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி ஜூலை 11-ந் தேதி நடக்கிறது. இதற்கான இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

மனிஷ் பாண்டே ஒரு நாள் போட்டி தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் பிரித்விஷா, மயங்க் அகர்வால், உஸ்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், அனுமன் விகாரி, ரி‌ஷப் பந்த், ராகுல் சாகர், வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், குருணால் பாண்டியா, தீபக் சாஹர், நவ்தீப் சைனி, கலீல் அகமது, அவஷ்கான் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஸ்ரேயாஸ் அய்யர் டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியில் ஈஸ்வரன், சகா, ஷிவம் துபே, உஸ்மான் கில், பிரியங் பஞ்சால், கவுதம், பரத், நதீம், மயங்க் மார்கண்டே, சைனி, முகமது சிராஜ், ‌ஷர்துல் தாகூர், அவெஷ்கான் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.