முடிவுக்கு வந்தது களவாணி 2 படத்தின் பிரச்சனை

0

விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘களவாணி 2’. இப்படத்தை இயக்குனர் சற்குணம் இயக்கியுள்ளார். இப்படத்திற்கான காப்பிரைட் உரிமைகாக நடிகர் விமலிடம் பணம் கொடுத்ததாகவும் கூறி சிங்காரவேலன் தரப்பினர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றிருந்தனர்.

இயக்குனர் சற்குணம் தரப்பினர் இந்த தடையை உடைத்தனர். இந்நிலையில் இன்று நேரில் சந்தித்து கொண்ட விமல் மற்றும் சிங்காரவேலன் பிரச்சனையை பேசி தீர்த்து கொண்டனர். சிங்காரவேலன் கொடுத்த பணத்திற்கு இரண்டு படங்களில் நடித்து கொடுத்து விடுவதாக விமல் உத்தரவாத கடிதம் கொடுத்ததையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக சிங்காரவேலன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.