பா.ஜனதாவோ, தேசிய ஜனநாயக கூட்டணியோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது- குலாம்நபி ஆசாத்

0

பீகாரில் காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தலுக்காக நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்த எனது அனுபவத்தில் ஒன்றை கூறுகிறேன். பா.ஜனதா கட்சியோ அல்லது அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது.

தேர்தல் முடிந்த பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத, பா.ஜனதா அல்லாத அரசு தான் மத்தியில் அமையும். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் மத்திய அரசுக்கு தலைமை தாங்குவதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயர் ஒருமித்த கருத்துடன் பரிந்துரைக்கப்பட்டால் நல்லது.

Leave A Reply

Your email address will not be published.