நைஜீரியாவில் ரமலான் நோன்பு காலத்தில் சாப்பிட்டதாக 80 பேர் கைது

0

அபுஜா:

மேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சமஅளவில் வாழ்கின்றனர். நாட்டின் வடபகுதியில் உள்ள சில மாநிலங்களில் மட்டும் இஸ்லாமிய ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களை மீறிய வகையில் செயல்படுபவர்களை கண்டுபிடித்து தண்டிக்க ‘ஹிஸ்பா’ எனப்படும் போலீஸ் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கானோ மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் பொது இடத்தில் உணவு சாப்பிட்டதாக 80 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களாக கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் மாலைவரை காவலில் வைத்து, எச்சரித்து விடுவிக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.