நான் அப்படி கூறவில்லை – அலறி அடித்து விளக்கம் கொடுத்தார் குல்தீப் யாதவ்

0

எம்எஸ் டோனி விக்கெட் கீப்பிங் பணியில் உலகத்தரம் வாய்ந்த வீரராக போற்றப்படுகிறார். சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகள் வீழ்த்தும் வகையில் பந்து வீசுவது எப்படி என்பதை ஆடுகளத்தின் தன்மை மற்றும் எதிரணி பேட்ஸ்மேன்களின் செயல்பாட்டை கணித்து அறிவுரை வழங்குவார். டோனியின் ஆலோசனையை கேட்டு பந்து வீசி விக்கெட்டை சாய்த்ததாக பல பந்து வீச்சாளர்கள் பெருமையாக சொல்லி இருக்கிறார்கள்.

சியட் நிறுவனம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் விழாவில் குல்தீப் யாதவிடம் டோனியின் டிப்ஸ் உங்களது பந்து வீச்சுக்கு உதவியதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு குல்தீப் யாதவ் ‘‘டோனி எனக்கு அளித்த அறிவுரை அதிக முறை தப்பாகத்தான் முடிந்தது. அவர் சொல்வதுபோல் பந்து வீசி அது சரியாக அமையாவிட்டாலும் அதனை நீங்கள் அவரிடம் சென்று சொல்ல முடியாது.

அதுமட்டுமின்றி டோனி அதிகம் பேச மாட்டார். முக்கியமான விஷயத்தை பந்து வீச்சாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினால் மட்டுமே வந்து சொல்வார்’ என்று அவர் தெரிவித்தார்’’ இந்த செய்தி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதமாக கிளம்பியது.

இதுகுறித்து குல்தீப் யாதவ் இன்ஸ்டாகிராமில் அளித்துள்ள விளக்கத்தில் ‘‘இங்கே, எந்தவித காரணமில்லாமல் மலிவான வதந்திகளை உருவாக்க விரும்பும் நமது மீடியாக்ளின் மற்றொரு சர்ச்சையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம். இந்த செய்தி முற்றிலும் தவறானது. மதிப்பிற்குரிய டோனி குறித்து நான் எந்தவொரு விரும்பத்தக்காத செய்தியும் கொடுக்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.