நடிகர் சங்க தேர்தலில் எங்கள் அணி மீண்டும் போட்டியிடும் – நடிகர் நாசர் அறிவிப்பு

0

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நடத்துவதற்கான பணிகள் முழுவீச்சாக தொடங்கி உள்ளன. இதுகுறித்து ஆலோசிக்க நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் நேற்று நடந்தது. இது முடிந்த பிறகு நடிகர் நாசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. முறைப்படி அலுவலகத்தை இன்று அவரிடம் ஒப்படைப்போம்.

தேர்தல் நடத்துவதற்கான 3 இடங்களை நாங்கள் பரிந்துரை செய்வோம். அதில் ஒரு இடத்தை நீதிபதி பத்மநாபன் தேர்வு செய்து தேர்தலை நடத்துவார். ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் பட்டியல் மாவட்ட பதிவாளரிடம் வழங்கப்படும். நடிகர் சங்க தேர்தலில் எங்கள் அணி மீண்டும் போட்டியிடும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.