தான் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தின் வெற்றிக்கு பின்பு ராகவா லாரன்ஸ் செய்த பெருந்தன்மை கொண்ட விஷயம்

0

தமிழில் அஜித்தின் அமர்க்களம் படத்தில் இடம்பெற்ற ‘மகா கணபதி’ பாடல் காட்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தில் பட்டவர் நடிகர் ராகவா லாரன்ஸ் . இவர் சினிமா, நடிப்பு, நடனம் போக சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். நீண்ட நாட்களாக இருதய கோளாறால் அவதி படும் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அவர் உதவி செய்து வருகிறார்.

தொடர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த முதியவர்களுக்கு வீடு கட்டி தருவதாக சொன்னார் . இந்த நிலையில் தற்போது முதியவர் கணேசன் என்பவருக்கு வீடு கட்டி கொடுத்து கிரகப்பிரவேசம் நடத்தியுள்ளார். அதனுடன் அண்மையில் அவரின் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படத்தின் வெற்றியால் இப்போது அவரின் ஒவ்வொரு படங்கள் வெளியீட்டிற்கு பின் 15 நாட்கள் சேவை செய்ய போகிறார் . அவரை காண முடியாதவர்களை நேரில் சென்று தானே சந்திக்கவிருப்பதாகவும் குழந்தைகளின் படிப்பிற்காக உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.