கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்

0

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ‘

இப்படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், சித்தார்த் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் நடந்த நிலையில் திடீரென்று நிறுத்தப்பட்டது. .

படத்தை தயாரிக்க ஒப்பந்தமான லைகா புரொடக்‌ஷன்ஸ் பின்வாங்கியதால் வேறு நிறுவனத்தை வைத்து தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்தியன் 2 படப்பிடிப்பு இந்த மாத இறுதியிலோ அடுத்த மாத தொடக்கத்திலோ தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.