இலங்கையில் மேலும் 60 பேர் கைது- ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது

0

கொழும்பு:

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல ஓட்டல்களின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு விரும்பத்தகாத பதிவை மையமாக வைத்து அந்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடலோர நகரமான சிலாபம் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினருக்கு இடையில் கலவரம் வெடித்தது. .

இதைதொடர்ந்து, ஹெட்டிபொல பகுதியிலும் இருபிரிவினருக்கு இடையில் மீண்டும் மோதல் வெடித்தது. இதில் ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தேவையற்ற வதந்திகள் பரவாமல் இருக்க சமூக வலைத்தளங்களும் முடக்கி வைக்கப்பட்டன.

இந்தப் பகுதிகளில் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு இன்று நீக்கப்பட்ட நிலையில் புதிய கலவரம் தொடர்பாக சுமார் 60 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.