இந்தியாவில் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வாரண்டி நீட்டிப்பு

0

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் ஃபேம் II சான்று பெற்ற ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வாரண்டியை இரண்டு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ.27,000 வரை மானியம் கிடைக்கும். இதன் மூலம் ஏத்தர் 450 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ரூ.1,23,230 என அந்நிறுவனம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏத்தர் 450 ஸ்கூட்டரில் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரஷ்லெஸ் டி.சி. மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏத்தர் 450 கொண்டிருக்கும் மோட்டார் 20.5 என்.ம். டார்க் செயல்திறன் வழங்கும். இது ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் 7-இன்ச் கேபாசிட்டிவ் தொடுதிரை வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், நேவிகேஷன் அசிஸ்ட், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, சார்ஜிங் பாயின்ட் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கிறது. இத்துடன் ஓவர்-தி-ஏர் மென்பொருள் மற்றும் ஃபம்வேர் அப்டேட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.