ஆசிய நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்ற வீரர் விபத்தில் பலி

0

போரூர்:

அமைந்தகரை ஷெனாய் நகர் ஜெயலட்சுமி காலனியைச் சேர்ந்தவர் பத்ரிநாத். இவரது மகன் பாலகிருஷ்ணன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு நடந்த ஆசிய நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றனர்.

நேற்று இரவு அவர் நண்பர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளோடு தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.