அமெரிக்காவில் முதியவரை பேருந்திலிருந்து தள்ளிவிட்டு கொன்ற பெண்

0

லாஸ் வேகாஸ்:

அமெரிக்காவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பெண் ஒருவர் முதியவரைப் பேருந்திலிருந்து தள்ளிவிட்டதில் முதியவர் உயிரிழந்துள்ளார் . இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் வசித்து வருபவர், கதேஷா பிஷப். 25 வயது பெண். இவர் கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி பேருந்தில் பயணம் செய்ய தன் மகனுடன் ஏறியுள்ளார். அப்போது அவர் முந்தியடித்துக் கொண்டு ஏறியது மட்டுமின்றி , எதிரே இறங்கிக்கொண்ட பயணிகளிடம் மோசமாக பேசியதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் பேருந்தில் இருந்த 74 – வயது முதியவர் ஒருவர், அமைதியாக அன்பாகப் பேசுங்கள் என அறிவுரை சொல்லியிருக்கிறார். ஆனால், தொடர்ந்து ஆத்திரத்துடன் பேசிய அந்தப் பெண், கையில் பொருள்களுடன் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற அந்த முதியவரை ஆவேசமாக பிடித்து கீழே தள்ளி விடுகிறார்.

இந்த தாக்குதலால் அவருக்குத் தலையில் காயம் ஏற்படுகிறது. ஆனாலும் அந்தப் பெண் தொடர்ந்து சத்தமாக பேசிக்கொண்டு இருக்கிறார். இந்தக் காட்சிகள் யாவும் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. ஆயினும் , அதில் மைக் வசதி இல்லாததால் அவர்கள் பேசிய விவரங்கள் பதிவாகவில்லை. அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதியவர் செர்ஜி ஃபார்னியர் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஏப்ரல் மாதம் 23 -ம் தேதி இறந்தார் . இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் கதேஷா பிஷப் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் கொலை வழக்கை நேரிட்டு வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.